மஹாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பது தொடர்பான சர்ச்சை.. முதலமைச்சர்- ஆளுநர் இடையே வலுக்கும் சொற்போர்

0 427
மஹாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பது தொடர்பான சர்ச்சை.. முதலமைச்சர்- ஆளுநர் இடையே வலுக்கும் சொற்போர்

மஹாராஷ்டிராவில், வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக, ஆளுநர்-முதலமைச்சர் இடையே மோதல் வெடித்துள்ளது. 

பல்வேறு கட்டத் தளர்வுகள் அறிவித்து மதுக்கடைகளைத் திறந்த பின்னரும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன் எனக் கேட்டு ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி, முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.

இதனிடையே ஆளுநரின் கடித்ததில் கடுமையான சொற்கள் இடம் பெற்றிருப்பதாக பிரதமர் மோடிக்கு புகார் தெரிவித்து சரத் பவார் கடிதம் எழுதியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments