நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறுதேர்வு... தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது

0 765
நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறுதேர்வு... தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது

நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று மீண்டும் தேர்வு நடத்தபடுகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனது.

இதனால், விண்ணப்பித்த சுமார் 15 லட்சத்து 97 ஆயிரம் பேரில், 85 முதல் 95 சதவிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தலின் பேரில், தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments