மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு, 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0 874
மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு, 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு, 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு, அதிமுக, திமுக உள்ளிட்டவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு அமல்படுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.


இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments