25,000 உறுப்பினர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

0 1743
குறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

குறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நேசன், திருச்சி அசூரில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனத்திற்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி அமர்வு, பணம் பறிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டதாக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தமிழகத்தில் லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறிய நீதிபதிகள்,இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அரசியல் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் அனுமதி வழங்குகிறது? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கட்சி என அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம், சட்டத்துறை, பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments