கொரோனாவால் அதிகம் பாதிக்க வாய்ப்பு உடல்பருமன் கொண்டோருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

0 4831
கொரோனாவால் அதிகம் பாதிக்க வாய்ப்பு உடல்பருமன் கொண்டோருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

உடல் பருமன் கொண்டோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், ஆதலால் அவர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தொற்று  குறித்து அமெரிக்காவில்  நடந்த ஆய்வில், சாதாரண நபர்களை காட்டிலும் உடல் பருமனாக இருப்போரே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் சாதாரண நபர்களுடன் ஒப்பிடுகையில் உடல் பருமன் கொண்டோரே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

உடல் பருமனாக இருப்போருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருப்பதே  இதற்கு காரணமென ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக கூறியுள்ள மருத்துவர்கள், இதை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனவும், இதற்கான சத்தான காய்கறிகளையும்,  தரமான அசைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேபோல் நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை தவறாமல் மேற்கொண்டால் உடல் பருமனாக இருப்போர் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments