கொரோனா தொற்று பரவும் அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது; நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

0 1450
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போரில் இந்தியா நிச்சயம் வெல்லுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போரில் இந்தியா நிச்சயம் வெல்லுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாலாசாகேப் விக்கி படேலின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு காணொலி மூலம் பேசிய அவர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட அபாயம் இன்னமும் முற்றிலுமாக நீக்கிவிட வில்லை என்றார்.

எனவே வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது என்ற அவர், மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றார்.

முக கவசம் அணியவேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம் வெல்லுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments