தமிழகத்தில் தனி திரையரங்கங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் திறப்பா?

0 9914

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐம்பது சதவீதம் இருக்கைகளில் ரசிகர்களை அனுமதித்து திரையரங்குகளை வரும் 15- தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, திரையரங்குகளைப் புதுப்பித்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் திரையரங்கு உரிமையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே , தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசின் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் வரும் 22 ஆம் தேதி முதல் முதல்கட்டமாகத் தனியாக இயங்கிவரும் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில், திரையரங்கில் தின்பண்டங்கள் விற்க அனுமதியில்லை. படிப்படியாக மல்டிப்ளக்ஸ் திரையரங்கங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments