இந்து மருமகளுக்கு, முஸ்லீம் மாமியார் வளைக்காப்பு நடத்துவது போன்ற விளம்பரம்... சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறிய தனிஷ்க் நகைக் கடை விளம்பரம்

0 9254
இந்து மருமகளுக்கு, முஸ்லீம் மாமியார் வளைக்காப்பு நடத்துவது போன்ற விளம்பரம்... சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறிய தனிஷ்க் நகைக் கடை விளம்பரம்

பிரபல டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று, சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரம் ஒன்றை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இது லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் ட்விட்டரில் Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனதாலும் விளம்பரத்தை யூடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments