மது அருந்திய நிலையில் ஏசி காரில் தூங்கிய நபர் சடலமாக கண்டெடுப்பு

0 1543
மது அருந்திய நிலையில் ஏசி காரில் தூங்கிய நபர் சடலமாக கண்டெடுப்பு

நொய்டாவில் மதுஅருந்திய நிலையில் ஏ.சி. காருக்குள் தூங்கிய நபர், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சுந்தர் பண்டிட் என்ற அந்த நபர், காரில் ஞாயிற்றுக்கிழமை தூங்கிய நிலையில் நேற்று காரில் அசைவற்று கிடந்துள்ளார். அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் புகார் அளிக்காதபோதும் தகவலின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், என்ஜீனில் இருந்து கசிந்த கார்பன் மோனோக்சைட் போன்ற விச வாயு, ஏசியால் காருக்குள் வந்ததால், இதை சுவாசித்ததால் அவர் இறந்திருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments