தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1475
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments