கொரோனா காரணமாக பொறுப்பு அதிகமாக உள்ளது... குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ்.

0 3125
கொரோனா காரணமாக பொறுப்பு அதிகமாக உள்ளது... குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ்.

உத்தரப்பிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில், பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

காசியாபாத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த சவுமியா பாண்டே, கொரோனா பரவல் காரணமாக நோடல் சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

கர்ப்பிணியாக இருந்த சவுமியாவுக்கு, 2 வாரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அரசு பணியாளர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு உள்ள நிலையிலும், சவுமியா 14 நாட்களில் பணிக்கு திரும்பி, கைக்குழந்தையுடன் பணியாற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

கொரோனா காரணம் என்பதால் ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பு அதிகமாக உள்ளதென சவுமியா குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments