நள்ளிரவில் காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீயால் உடல் கருகி ஒருவர் பலி

0 2710
நள்ளிரவில் காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீயால் உடல் கருகி ஒருவர் பலி

தூத்துக்குடியில் காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்து வீட்டிற்கும் பரவி, உறங்கி கொண்டிருந்த நபர் உடல் கருகி பலியாகினார்.

தெற்கு காட்டன் சாலையில் உள்ள நடராஜன் காம்பவுண்டில் குடியிருந்த தினேஷ் என்பவருக்கும், மற்ற வீட்டுக்காரர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன் தினேஷ் வீட்டை காலி செய்துள்ளார்.

இந்த ஆத்திரத்தில் இருந்த அவர், நள்ளிரவில் வந்து காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மளமளவென அருகில் இருந்த வீட்டிலும் தீ பரவியதில், அங்கு உறங்கி கொண்டிருந்த அண்ணாமலை என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

7 வயது சிறுவன் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், தினேஷை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments