நாடு முன்னேற வேண்டும் என்றால் பிரதமர் மோடி போல ஒரு தலைவர் இருக்க வேண்டும் - குஷ்பூ

0 2173
நாடு முன்னேற வேண்டும் என்றால் பிரதமர் மோடி போல ஒரு தலைவர் இருக்க வேண்டும் - குஷ்பூ

நாடு முன்னேற வேண்டும் என்றால் பிரதமர் மோடி போல ஒரு தலைவர் இருக்க வேண்டும் என பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பூ நேற்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் தேசியப் பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து குஷ்பு வாழ்த்து பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டு மக்களுக்கு எது நல்லது, நாட்டுக்கு எது நல்லது என்பதை உணர்ந்து பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments