கேரளாவில் தனியார் விவசாயத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்...தமிழகத்திலும் ஏன் இதை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

0 5195
கேரளாவில் தனியார் விவசாயத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்...தமிழகத்திலும் ஏன் இதை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல, தமிழகத்திலும் தனியார் விவசாய பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை - பேரையூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசகன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வேலை வாய்ப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக சுட்டிக் காட்டினர்.

கேரளாவில்,  தனியார் விவசாய நிலங்களில்,100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கான தொகையை தனியார், அரசிடம் செலுத்தி விடுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எனவே, தமிழகத்திலும் இதனை அமல்படுத்துவது குறித்து பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 3 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments