எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்கள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

0 870
எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்கள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

லடாக், அருணாச்சல் பிரதேசம், பஞ்சாப், சிக்கிம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல  எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், பாகிஸ்தானும், சீனாவும்  திட்டம் போட்டே எல்லைப் பிரச்சனையை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

பிரதமர்  மோடியின் தொலைநோக்குப் பார்வையால் எல்லை பிரச்சனை திறமையாக சமாளிக்கப்படுவதாக கூறிய அவர், அதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் முக்கிய, வரலாற்றுபூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிதாக திறக்கப்பட்ட 44 பாலங்களில் பெரும்பாலானவை, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments