பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

0 2406
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படுகிறது

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த பால் ஆர்.மில்கிரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரபான வழிமுறைகளில் விற்க முடியாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள், எரிசக்தி, பங்கு பத்திரங்கள் விற்பனை மூலம், நாள்தோறும் பிரமிக்க வைக்கும் வகையில் பெருந்தொகைகள் கைமாறுகின்றன.

இவற்றிற்கான புதிய ஏல வடிவங்களை பால் மில்கிரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவரும் வடிவமைத்தவர்கள் என்றும், விற்பவர்கள், வாங்குபவர்கள், வரி செலுத்துபவர்கள் என சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்மைதரும் வகையில், புதிய ஏல முறைகளை உருவாக்கியவர்கள் என்றும் நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

1994ஆம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அமெரிக்கா முதன் முதலில் இவர்கள் உருவாக்கிய ஏல முறையைப் பயன்படுத்தியது. தற்போது இந்த முறையை பல்வேறு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் இருவரின் கண்டுபிடிப்புகளும் உலகளவில் பயனளித்துள்ளதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments