கொரோனாவில் இருந்து ட்ரம்ப் மீள, அல்லும் பகலும் பிரார்த்தனை செய்த தெலங்கானா விவசாயி உயிரிழப்பு

0 3012
கொரோனாவில் இருந்து ட்ரம்ப் மீள, அல்லும் பகலும் பிரார்த்தனை செய்த தெலங்கானா விவசாயி உயிரிழப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து வந்த தெலங்கானா விவசாயி, நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேடக் (Medak) நகரைச் சேர்ந்தவர் விவசாயி புஸ்ஸ கிருஷ்ணா ராஜு. (Bussa Krishna Raju) அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர அபிமானியான இவர், கடந்த ஆண்டு ட்ரம்புக்கு ஆறடி சிலை நிறுவி கவனத்தை பெற்றார்.

இந்த நிலையில் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராஜு, 3 நாட்களாக பட்டினி கிடந்து, பிரார்த்தனை செய்து வந்த நிலையில் நெஞ்சு வலியில் உயிரிழந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments