வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

0 1064
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன்  முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

வடக்கிழக்கு பருவ மழை அக்டோபர் 3ம் வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தலைமை செயலகத்தில்  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.

ஏரிகள், குளங்களை தூர் வாருதல், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தேவைப்படும்போது தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், மழை நீர் வடிகால்களை தயார் நிலையில் வைப்பது, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments