நடப்பாண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டும் மேட்டூர் அணை

0 2649
நடப்பாண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டும் மேட்டூர் அணை

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24,039 கன அடியிலிருந்து 26,102 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 63.69 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 16ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை மீண்டும் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments