மதுரை கருப்பாயூரணி அருகே ஊராட்சி தலைவர் உள்ளிட்ட இருவர் படுகொலை...

0 1332
மதுரை கருப்பாயூரணி அருகே ஊராட்சி தலைவர் உள்ளிட்ட இருவர் படுகொலை...

மதுரை வரிச்சியூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற பணியாளர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற பணியாளரான முனியசாமி ஆகிய இருவரும், வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மலை அடிவாரத்தில் கிடந்துள்ளனர்.

காலையில் ஊர்மக்கள் பார்த்து கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் ஊர்மக்கள் திரண்டதோடு, குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறியதால் அங்கு பரபரப்பும் சோகமும் உருவானது.

கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும், அதுவரை சடலங்களை மீட்க விடமாட்டோம் என்று திடீரென வரிசூர் பகுதியில் மறியலிலும் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். தடவியல் துறையினரும் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் இருவரின் சடலங்களை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதிமுகவை சேர்ந்தவர் என்று கூறப்படும் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவரான போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், முன்பகை காணரமாக கொலை நடந்துள்ளதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு வெளியே போய்விட்டு வருவதாகக் கூறிச் சென்ற கிருஷ்ணன், அதன் பிறகு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சடலங்கள் கிடந்த குன்னத்தூர் மலை அடிவாரம் குற்றச்செய்கைகளில் ஈடுபடுபவர்களின் புகலிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments