சென்னை தியாகராயநகரில் முதியவர், குடும்பத்தினரை கட்டிப் போட்டு 250 சவரன் கொள்ளையடித்த வழக்கில் நகைகள் மும்பையில் மீட்பு

0 917
சென்னை தியாகராயநகரில் முதியவர், குடும்பத்தினரை கட்டிப் போட்டு 250 சவரன் கொள்ளையடித்த வழக்கில் நகைகள் மும்பையில் மீட்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 250 சவரன் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில், தங்கக் கட்டிகளாக நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த ஒன்றாம் தேதி, தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் உள்ள நூருல் ஹக் என்ற தொழிலதிபர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

விசாரணையில் வீட்டில் தங்கியிருந்த மொய்தீன் என்பவர் 9 ஆட்களை தயார் செய்து, கடத்தல் நாடகமாடி கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. தூத்துக்குடியில் இருக்கும் மொய்தீன் பெற்றோரிடம் மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசும் போது மும்பையில் மொய்தீன் நகைகளை தங்க கட்டியாக விற்பனை செய்ததை தெரிவித்துள்ளார்.

இதனால் தனிப்படை ஒன்று சென்னையிலிருந்து மும்பைக்கு சென்று, அம்மாநில போலீசார் உதவியோடு, 180 சவரனை, தங்கக்கட்டியாக மீட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முக்கிய கொள்ளையனான மொய்தீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments