கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம், தக்காளி, கேரட் விலை திடீர் உயர்வு.!

0 7155
கோயம்பேடு காய்கறி சந்தையில் வெளிமாநில வரத்து குறைந்ததால் வெங்காய விலையும் உயர்வு

வெளி மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ 50 ரூபாய் வரை விற்பனையானது.

தக்காளியும் வெங்காயமும் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரையிலும் கேரட் கடந்த வாரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனையாகின.

இவை மூன்றைத் தவிர்த்து மற்ற காய்கறி வகைகள் அனைத்தும் கடந்த வாரத்தை விட விலை சற்று குறைந்து காணப்பட்டன. இதனிடையே மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள், உள்ளூர் மற்றும் வெளிமாநில லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனைக்குப் பிறகே, சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பு கண்டறியப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments