தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு நாப்கின் வழங்க நடவடிக்கை.! சட்டதிருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது, தமிழ்நாடு அரசு

0 1846
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்... சட்டதிருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது, தமிழ்நாடு அரசு

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சானிடரி நாப் கின்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான வசதியை உருவாக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்தத்தை, அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் விநியோகிக்கப்படும்.

இதுதவிர, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு கவசங்கள், உடைகள் போதிய அளவில் கையிருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

இவைகள் அனைத்தும் தேசிய தர நிர்ணய அங்கீகாரம் பெற்ற பொருட்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என் றும் அரசிதழில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments