தினசரி தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிராவை முந்தியது கேரளா.. ஒரே நாளில் 11,755 பேருக்கு கொரோனா..!

0 3559

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடக்கூடும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையை 15 ஆயிரமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். தினசரி தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிராவில், இந்த மாதத்தின் இதுவரை உள்ள நாட்களில் குறைவாக நேற்று 11 ஆயிரத்து 416 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் கடந்த மூன்று வாரங்களாக மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது. பரவல் விகிதம் தேசிய சராசரி ஒரு சதவீதம் ஆக உள்ள நிலையில், கேரளாவில் அது 3.5 சதவிகிதமாக உயர்ந்து காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments