சென்னையில் ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

0 2272
சென்னையில் ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சென்னையில் கடந்த ஒரு வார காலத்தில் 8 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள தரவுகளின் படி, வளரசவாக்கம், பெருங்குடி, திருவொற்றியூர், திருவிக நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், மணலி ஆகிய 8 மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

அதிகப்பட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் தொற்று பாதிக்கப்படுவோரின் விகிதம் 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், அம்பத்தூர், அடையாறு, மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 5.3 சதவீதம் குறைந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments