உலகம் முழுவதும் ஒரே நாளில் 3.51 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

0 497
உலகம் முழுவதும் ஒரே நாளில் 3.51 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 51 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 74 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதில் ஒரு நாள் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக குறைந்திருந்த பெருந்தொற்றின் பாதிப்பு நேற்று அதிகரித்துக் காணப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

2 கோடியே 81 லட்சம் பேர் பெருந்தொற்றிலிருந்து குணமாகியுள்ள நிலையில், 82 லட்சத்து 72 ஆயிரம் பேர் தொடர் சிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments