ஹத்ராஸ் பெண் படுகொலை வழக்கு விசாரணையை ஏற்றது சிபிஐ

ஹத்ராஸ் பெண் படுகொலை வழக்கு விசாரணையை ஏற்றது சிபிஐ
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம் தலித் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
காசியாபாத் சிபிஐ அலுவலகத்தில் வழக்கின் ஆவணங்கள் யாவும் ஒப்படைக்கப்பட்டன.
சிபிஐ விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு பரிந்துரை செய்ததையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புடன் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையால் மிரட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
Comments