பீகார் தேர்தலுக்கான காங். நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

0 1138

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

30 பேரை மட்டும் அரசியல் கட்சிகள் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாஜகவில் இருந்து காங்கிரஸில் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், நடிகர் ராஜ்பாபர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments