சாட்சிக்கு ஸ்கெட்ச் போட்டு விரட்டிய ரவுடிஸ்க்கு மாவுக்கட்டு..!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொலை வழக்கு சாட்சியை விரட்டிச்சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடிகளுக்கு காவல்துறையினர் மனித நேயத்துடன் மாவுகட்டு போட்டுவிட்டனர்.
புதுச்சேரி மாநிலம் ஐய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் கடத்தப்பட்டதாக கடந்த 5ந்தேதி இரவு வானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் செடி மறைவில் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அரவிந்த் மீட்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கடத்தல் மற்றும் கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக குருமாம்பேட்டை சேர்ந்த ரவுடி ராஜேஷ் என்பவனை செம்மன் குவாரியில் வானூர் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரிடம் தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து அவனது இடது கால் முறிந்ததாக கூறப்படுகின்றது. அவனை மீட்ட காவல்துறையினர் மனித நேயத்துடன் மருத்துவமனையில் சேர்த்து காலுக்கு மாவுகட்டு போட்டு விட்டனர்.
அவருடன் அறிவாளுடன் சுற்றித்திரிந்த மேலும் இரண்டு பேரை சுற்றிவளைத்தபோலீசார் அதில் கையில் அரிவாளுடன் ஓடிய போது வழுக்கி விழுந்து கையை முறித்துக் கொண்ட ரவுடிக்கும் மாவு கட்டு போட்டு விட்டனர்.
விசாரணையில் தனது சகோதரர் கொலைக்கு பழிக்குபழியாக கார்த்தி என்பவனை கொலை செய்த சம்பவத்தில் அரவிந்த் நேரடி சாட்சியாக இருப்பதால் சாட்சியை கலைக்கும் நோக்கில் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments