காடுகள் வளர்ப்பில் வனத்துறை 100 ஏக்கரில் திட்டம்

0 3051
காடுகள் வளர்ப்பில் வனத்துறை 100 ஏக்கரில் திட்டம்

ராமநாதபுரத்தை ஒட்டிய கடலோர கிராமங்களில் வனப்பரப்பை விரிவுபடுத்தவும் உயிர் பல்வகைத் தன்மையை அதிகரிக்கவும் 100 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டத்தை மாவட்ட வனத்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.

சதுப்புநிலக் காடுகள், மாங்குரோவ் காடுகள் என்றெல்லாம் அழைக்கப்படும் அலையாத்திக் காடுகள், உப்பு நீரில் வளரக்கூடியவை. பல்வேறு உயிரினங்களின் உறைவிடமாகவும் அவற்றுக்கான உணவுக் கூடமாகவும் விளங்கும் இவ்வகைக் காடுகள், கடலில் எழும் பேரலைகள் முதற்கொண்டு பல்வேறு இயற்கைச் சீற்றங்களில் இருந்து மனித இனத்தையும் காக்கின்றன.

சுனாமி பேரலை தாக்கிய தருணத்தில் பெருமளவு பாதிப்பை குறைத்தன என்பதால், கடலோர மாவட்டங்களில் அலையாத்திக் காடுகளை அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரந்து விரிந்து காணப்பட்ட அலையாத்திக் காடுகள், புவி வெப்பமயமாதலாலும் கடலில் கழிவுகள் கலப்பதாலும் பெருமளவு சுருங்கிவிட்டன. தற்போது ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவிலான அலையாத்திக் காடுகள் மட்டுமே வனத்துறையினரால் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.

எனவே காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு காந்திநகர், காரங்காடு, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 ஏக்கரில் தரிசு நிலத்தில் 10 லட்சத்து 64ஆயிரம் ரூபாய் செலவில் மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்படுகின்றன. கடல் நீரை கொண்டு வர வாய்க்கால் தோண்டி, நீர் தேங்காமல் சுழற்சியாக செல்லும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

அலையாத்தி காடுகள் வளர்ப்பு தொடர்பான வனத்துறையினரின் இடைவிடாத முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments