பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஆயுதங்கள் கடத்தும் முயற்சி முறியடிப்பு: 4 ஏகே 47 வகைத் துப்பாக்கிகளை ராணுவத்தினர் கைப்பற்றினர்

0 719
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஆயுதங்கள் கடத்தும் முயற்சி முறியடிப்பு: 4 ஏகே 47 வகைத் துப்பாக்கிகளை ராணுவத்தினர் கைப்பற்றினர்

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஆயுதங்கள் கொண்டுவரும் முயற்சியை முறியடித்த ராணுவத்தினர், 4 ஏகே 47 வகைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து கிசன்கங்கா ஆற்று வழியாகக் கொண்டுவரப்பட்ட இரு பைகளை ராணுவத்தினர் கைப்பற்றினர்.

அதைத் திறந்து பார்த்தபோது அதனுள் 4 ஏகே 47 வகைத் துப்பாக்கிகள், தோட்டா வைக்கும் உறைகள் 8, 240 தோட்டாக்கள் ஆகியன இருந்தன. இவற்றைக் கைப்பற்றியுள்ள ராணுவத்தினர் காஷ்மீருக்குள் ஆயுதங்களைக் கொண்டுவரும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments