'2021 ஆம் ஆண்டு குருபெயர்ச்சிக்கு பிறகு கொரோனாவிலிருந்து உலகம் விடுபடும்!' - தமிழ் ஆண்டு பஞ்சாங்க கணிப்பில் தகவல்

0 90835

நடப்பு சார்வரி ஆண்டை காட்டிலும் அடுத்த பிலவ ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பஞ்சாங்கம் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை அடுத்த செதளபதி கிராமத்தில் உள்ள முக்தீஸ்வரர், ஆதிவிநாயகர் ஆலயத்தில் உள்ள சிவ வேத ஆகம பாடசாலையில் அடுத்த தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்க கணிப்புகள், பஞ்சாங்கத்தில் சாஸ்திரபடியான பண்டிகைகள்,திதிகள் ,திருவிழா தேதிகள் ஆகியவற்றை முடிவு செய்யும் பஞ்சாங்க சதஸ் எனப்படும் கூட்டம் நடைimageபெற்றது.

பஞ்சாங்க சதஸில் சிவ வேத ஆகம பண்டிதர்களான மயிலாடுதுறை சபேச சிவாச்சாரியார், பழனி பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், சிங்கப்பூர் பாலசந்திர சிவாசரியார் , திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார், சிதலபதிவேதாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் ,காரைக்கால் ரமேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் கலந்துக்கொண்டு வேத சாஸ்திர படி பஞ்சாங்க நடைமுறைகளை முடிவு செய்தனர். இந்த சதஸின் முடிவுபடியே அடுத்த தமிழ் பிலவ ஆண்டுக்கான பஞ்சாகம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த கருத்தரங்கில் ஆற்காடு,மருத்துவகுடி ,அழகர்கோயில் மற்றும் இலங்கை நாட்டின் பஞ்சாங்க பதிப்பாளர்கள் ஆன்லைன் மூலம் கலந்துக்கொண்டனர். பின்னர், பஞ்சாங்க கணிப்பு குழுவின் தலைவர் பழனி பாலசுப்ரமணிய சிவாச்சாரியர் கூறுகையில் ,'' இந்த சார்வரி ஆண்டை தொடர்ந்து அடுத்த பிலவ ஆண்டு தொடக்கம் வரை இப்போது நாடு சந்தித்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாப இருக்கும். பிலவ ஆண்டின் தொடக்கத்தில் வைரஸின் தாக்கம் உக்கிரமாக இருக்கலாம். எனினும் 2021 - ஆம் ஆண்டு குரு பெயர்ச்சிக்கு பிறகு கொரோனா வைரஸ் முழுமையாக தீரும் . இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும். விவசாயிகள் செழிப்புடன் வாழ்வார்கள். மக்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட இறைவழிப்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் '' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments