எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் படுகாயம்

0 861
எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் படுகாயம்

காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் தோளில் குண்டு பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments