இந்தியாவுக்கு வெளியே பொருட்களை அனுப்புவதில்லை என்று கூறியதற்கு மன்னிப்புக் கோரியது பிளிப்கார்ட்

0 3614
இந்தியாவுக்கு வெளியே பொருட்களை அனுப்புவதில்லை என்று கூறியதற்கு மன்னிப்புக் கோரியது பிளிப்கார்ட்

இந்தியாவுக்கு வெளியே பொருட்கள் அனுப்புவதில்லை என்று நாகாலாந்து வாடிக்கையாளருக்கு பதில் கூறிய பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

திமாபூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏன் பொருட்களை வழங்குவதில்லை என பிளிப்கார்ட் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அந்நிறுவனம், இந்தியாவுக்கு வெளியே தங்கள் பொருட்களை வழங்குவதில்லை என பதில் கூறியிருந்தது.

இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால், பலரும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தவறு நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments