நாட்டிலேயே முதலாவதாக 100 சதவிகித பயணிகளை ஏற்றிச் செல்ல அசாமில் அனுமதி

0 1434

கொரோனா கால கட்டுப்பாடுகளுக்குப் பிறகு  நாட்டிலேயே முதலாவதாக அசாமில் அனைத்து விதமான பயணியர் வாகனங்களிலும் 100 சதவிகிதம் ஆட்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 100 சதவிகித பயணிகளை ஏற்றிச் செல்ல  அனுமதிக்க கோரி, அசாம் மோட்டார் போக்குவரத்து சங்கம் கடந்த 5 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக சங்க பிரதிநிதிகளுக்கும், மாநில போக்குவரத்து அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் 100 சதவிகித பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments