14ம் தேதி முதல் 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம்

0 2140
14ம் தேதி முதல் 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம்

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையில் அனைத்துப்பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்பட உள்ளது.

மேலும், மறுகூட்டல், மறு மதிப்பீடு கோரியவர்களுக்கும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments