தொடர்ச்சியாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால்தான் தமிழ் மொழி சேர்க்கப்படுமா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 1891
தொடர்ச்சியாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால்தான் தமிழ் மொழி சேர்க்கப்படுமா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தொல்லியல்துறை அறிவிப்பில் செம்மொழியான தமிழ்மொழி ஏன் முதலிலேயே சேர்க்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தொடர்ச்சியாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால்தான் தமிழ் சேர்க்கப்படுமா? என மத்திய அரசை வினவியுள்ளது.

மத்திய தொல்லியல் துறை கல்லூரியில், 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பட்டியலில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள்  கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ்மொழியையும் சேர்த்து புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அப்போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழமையான மொழிகளில் முதலானதும்,செம்மொழியுமான தமிழ்மொழி ஏன் முதலிலேயே சேர்க்கப்படவில்லை? தொடர்ச்சியாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தவுடன்தான் சேர்க்கப்படுமா? என வினவிய நீதிபதிகள், எதிர்ப்புகள் எழா விட்டால் தமிழ்மொழி இணைக்கப்பட்டிருக்குமா? என கேள்வி எழுப்பினர்.

மாநிலங்கள் சமயம் மற்றும் சாதி அடிப்படையில் அல்லாமல், மொழி வழியாகவே ஒன்றுபட்டுள்ளன எனக் கூறிய நீதிபதிகள், இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்து அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேட்டனர்.

செம்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பழமையான மொழிகள் எவை? எந்த அடிப்படையில் பாலி, பாரசீகம் உள்ளிட்டவை இந்த அறிவிப்பில் சேர்க்கப்பட்டது? என்பது தொடர்பாக தொல்லியல் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments