தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 6061
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் எனக் கூறியுள்ளார்.

அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments