இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 735
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதோடு, அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணம் இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments