தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி இணைப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி

0 1064
தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி இணைப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி

தொல்லியல் முதுகலை பட்டப்படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டியலில் எம்ஏ தமிழை சேர்த்தமைக்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். 

நொய்டாவில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி மையத்தில், 2020-2022 கல்வியாண்டுக்கான முதுகலை பட்டயப்படிப்புசேர்க்கை அறிவிப்பில் எம்ஏ தமிழ் இடம் பெறாமல் இருந்தது. அதை அடுத்து எம்ஏ தமிழை தகுதிப்பட்டியலில் சேர்க்குமாறு எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு கடிதம் அனுப்பினார்.

அதை ஏற்று மத்திய அரசு உரிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,  தமது கோரிக்கை மீது உடனடியாக, உரிய தருணத்தில் நடவடிக்கை எடுத்தமைக்காக எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments