தொல்லியல் படிப்பு சேர்க்கையில் தமிழ் புறக்கணிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

0 2061
தொல்லியல் படிப்பு சேர்க்கையில் தமிழ் புறக்கணிப்படுவது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தொல்லியல்துறையின் முதுகலை பட்டய படிப்பிற்கான, கல்வித் தகுதியில், செம்மொழியான தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிட் தீனதயாள் உபத்யாயா பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை படிப்பில் தமிழ் மொழியை சேர்க்க வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க, பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொல்லியல்துறை வெளியிட்ட 48,000 கல்வெட்டு ஆதாரங்களில், சுமார் 28,000 கல்வெட்டுகள் தமிழில் உள்ளதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments