நில ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 3843
நில ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்ற மதுரை கிளை

நில ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் நீர் நிலைகள், சாலை மற்றும் பொதுப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இதற்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்புள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments