இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

0 643
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இதனால் வணிக நேரத் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.

பகல் பதினொன்றரை மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து நாற்பதாயிரத்து 436 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 147 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 886 ஆக இருந்தது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குவிலைகள் 5 விழுக்காடு வரை உயர்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments