இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன் எடுத்துச் செல்கின்றனர் - பிரதமர் மோடி

0 1802
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன்எடுத்துச் செல்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன்எடுத்துச் செல்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வை, மக்கள் இயக்கம் என்ற பெயரில் மோடி முன்னெடுத்துள்ளார். டுவிட் ஒன்றின் மூலம் இந்த பிரச்சாரத்தை துவக்கி உள்ள மோடி, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே கையில் எடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்கள போராளிகளால் அதற்கு எதிரான போராட்டம் வலுப்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் இணைவோம் என்ற ஹாஷ்டாக்குடன் டுவிட்டர் பதிவிட்டுள்ள அவர், முகக்கவசம் அணிவதையும், கைகளை அடிக்கடி கழுவுவதையும், சமுக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் எப்போதும் நினைவு கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை மாதங்கள் மற்றும், குளிர்காலம் வர உள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது  குறித்து இந்த பிரச்சாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments