கொரோனா தொற்றை பரப்பிய சீனா அதற்குரிய பலனை அனுபவிக்கும்-அதிபர் டிரம்ப்

0 1983

உலக நாடுகளில் கொரோனா பரவ காரணமாக இருக்கும் சீனா அதற்கு உரிய பலனை  நிச்சயம் அனுபவிக்கும்  என அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார். 

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வெள்ளை மாளிகை திரும்பி உள்ள அவர், நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வீடியோ செய்தியில், தாம் பெற்ற கொரொனா அனுபவம் மக்களுக்கு கிடைக்காதவாறு பார்த்துக் கொள்வதாக டிரம்ப் உறுதி அளித்தார்.

இது அமெரிக்கர்களின் குற்றமில்லை என்ற அவர், கொரோனாவுக்கு முழு பொறுப்பும் சீனாவே என்றார். தமக்கு தொற்று பாதிக்கப்பட்டதன் மூலம், கொரோனாவுக்கான சக்தி வாய்ந்த மருந்துகள் பற்றி தாம் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments