ஐபிஎல்: 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

0 2571
ஐபிஎல்: 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார்.

மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் அதிகபட்சமாக, வாட்சன் 50 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 ரன்களையும் சேர்த்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments