Work-From-Home குறித்து மைக்ரோசாப்ட் சி.இ.ஓ கடும் எச்சரிக்கை..!

0 49770
Work-From-Home எனப்படும் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையில், நன்மைக்கு பதிலாக, எதிர்மறையான, ஆபத்தான விளைவுகளே அதிகம் தென்படுவதாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா எச்சரித்துள்ளார்.

ஆன்லைன் வழியாக நடைபெறும் மீட்டிங்குகள், அதாவது, அரை மணி நேரம் கூட்டங்கள் கூட, பெரியளவிலான அயர்ச்சியை ஊழியர்களிடம் ஏற்படுத்தி விடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டிலிருந்து பிசியாக பணியாற்றும் ஊழியர்களால், வேலை நேரம் முடிந்தவுடன், பணிச்சூழல் மனநிலையிலிருந்து, சொந்த வாழ்க்கைக்கு திரும்புவதில், தேக்கம் உள்ளதாகவும், சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

வொர்க் ப்ரம் ஹோமை நிரந்தரமாக்குவது சமூகத் தொடர்பு மற்றும் தொழிலாளர்களின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், சத்யா நாதெல்லா எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments