வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்பிற்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை- வெள்ளை மாளிகை மருத்துவர்கள்

0 654
வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்பிற்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை- வெள்ளை மாளிகை மருத்துவர்கள்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அதிபர் டிரம்பிற்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை மருத்துவர்கள், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அவரது ஆக்சிஜன் அளவு 96 முதல் 97 சதவிகிதமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கொரோனா தொற்றின் காரணமாக 4 நாட்கள் வாஷிங்டனில் உள்ள வால்ட்டர் ரீட் மருத்துவமனையில் தங்கி டிரம்ப் சிகிச்சை பெற்றார்.

திங்கள்கிழமை அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய நிலையில், அங்குள்ள ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments