கொரோனாவில் இருந்து அதிபர் டிரம்ப் முழுமையாக குணமடையாவிட்டால் அவருடனான நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் - ஜோ பைடன்

0 927
கொரோனாவில் இருந்து அதிபர் டிரம்ப் முழுமையாக குணமடையாவிட்டால் அவருடனான நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் - ஜோ பைடன்

கொரோனாவில் இருந்து அதிபர் டிரம்ப் முழுமையாக குணமடையாவிட்டால் அவருடனான நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4வது நாளிலேயே வீடு திரும்பினார்.

இந்நிலையில், வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடனான 2ம் கட்ட நேரடி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் விருப்பம் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய ஜோ பைடன், டிரம்ப் உடனான விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும், ஆனால் அவர் கொரோனாவில் இருந்து மீளாத பட்சத்தில் விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments