யெஸ் வங்கியில் ரூ 3642 கோடி கடனைத் திருப்பி செலுத்தாததால் காக்ஸ் குழும தலைமை அதிகாரி, ஆடிட்டர் ஆகியோர் கைது

0 1277
யெஸ் வங்கியில் ரூ 3642 கோடி கடனைத் திருப்பி செலுத்தாததால் காக்ஸ் குழும தலைமை அதிகாரி, ஆடிட்டர் ஆகியோர் கைது

காக்ஸ் அண்ட் கிங்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி அனில் கான்டேல்வால் மற்றும் அதன் ஆடிட்டர் நரேஷ் ஜெயின் ஆகியோரை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி ஊழல் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கியில் சுமார் 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் கடன் பெற்று இந்நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரையும் ஏழு நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments